முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பயன்படுத்தாத வங்கி கணக்கால் வரும் சிக்கல்கள்?

06:15 AM Apr 28, 2024 IST | Baskar
Advertisement

நாம் வங்கி கணக்கை ஓபன் செய்து வைத்திருப்போம். ஆனால், ஏதோ ஒரு சூழலில் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு இருப்போம். இப்படி பல காலமாக பயன்படுத்தாமல் இருக்கும் வங்கி கணக்குகளுக்கு நிறைய சிக்கல் இருக்கின்றன.

Advertisement

நாளடைவில் தேவைக்கு அதிகமாக, அல்லது அவசரத்திற்கு திறந்த வங்கி கணக்குகளை கவனிக்காமல் நாம் விடுவதால் பிரச்னைகள் நிறைய இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். அப்படி பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை இன்-ஆபரேட்டிவ் அல்லது டார்மண்ட் கணக்குகள் என்று அழைக்கின்றனர். இப்படி பயன்படுத்தப்படாமல் நமது வங்கி கணக்குகள் மூலம் சில அபாயங்களும் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்பு அதிகம்? நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு என்று வரும் பொழுது, முதலில் அங்கு பலிகடா ஆவது இந்த In-Operative மற்றும் Dormant கணக்குகள் தான். குறிப்பாக பண பரிமாற்ற மோசடிகள் நடக்கும் பொழுது மோசடிக்காரர்கள் இதுபோன்ற கணக்குகளை தான் ஹேக் செய்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் பணச் சலவை என்று கூறப்படும் Money Laundering, போதை பொருள் மற்றும் ஆட்கடத்தில் போன்ற விஷயங்களில் பண பரிவர்த்தனைக்கு இதுபோன்ற கணக்குகள் தான் பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கிறது அரசு.

ஆகவே தாங்கள் பயன்படுத்தாத கணக்குகள் குறித்த விவரங்களையும் நாம் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக நடந்தால் உடனடியாக அது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். காரணம், ஏதோ ஒரு அசம்பாவிதத்திற்கு நமது பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு உள்ளாகும்போது, போலீசார் நம்மிடமும் விசாரணை நடத்துவார்கள்.எனவே பயன்பாட்டில் இல்லையே என்று அலட்சியம் காட்டாமல், வங்கியை அணுகி உரிய நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. இது பார்க்க சிறிய விஷயமாக இருந்தாலும், இதனால் ஏற்படும் பிரச்னை பெரிதாக இருக்கும் என்பதை மறக்க கூடாது.

Read More: சோபோர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தகவல்!

Advertisement
Next Article