நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை!! - தர்மேந்திர பிரதான்!!
நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி எழுப்பினார். பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிக்பெரிய மோசடி என மக்களவையில் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார். நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்னை உள்ளன என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அரசியலுக்காகவே எதிர்க் கட்சிகள் நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வு அவசியம் என்று 2 முறை உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பொதுத் தேர்வு மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு ஏன் கொண்டுவரவில்லை? என்று கேள்வி எழுப்பியதோடு, தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் அரசுதான் கல்வித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர தவறிவிட்டது என்று பதிலளித்தார்.
Read more ; சட்டப்பேரவைக்குள் குட்கா.. முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!