முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுவதில் சிக்கல்..!! தமிழ்நாடு அரசுக்கு எழுந்த திடீர் கோரிக்கை..!!

People have demanded that the government should relax the strict rules and issue ration cards as soon as possible.
04:58 PM Oct 16, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நல்ல வரவேற்புள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப கல்விகளுக்கு மாதம் ரூ.1,000 இலவசமாக வழங்கப்படுகிறது. நிறைய பேர் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக பதிவு செய்தனர். ஆனால், தேர்தல் காரணமாக தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தவர்கள் நீண்ட காலமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

Advertisement

உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு பிரதான ஆவணம். ஆனால், சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை அரசு தொடங்கியிருக்கிறது. அதில், விண்ணப்பங்களை சரிபார்க்க நேரம் அதிகமாக எடுக்கப்படுகிறது. முன்பை விட இப்போது அதிக நாட்கள் ஆவதால் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்காக மக்கள் சிரமப்படுகின்றனர்.

சிலர் போலியான ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனால் அரசு விண்ணப்பத்தை சரிபார்ப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்கிறது. திருமணம் ஆகி தனி குடும்பமாக சென்ற பிறகு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதற்கு திருமண சான்றிதழ், திருமண பத்திரிகை போன்ற ஆதாரங்கள் தேவைப்படுகிறது. ரேஷன் கார்டில் அந்த ஆவணங்களை வைத்து பெயர் நீக்கம் செய்தால் மட்டுமே புதிய கார்டில் பெயர் சேர்க்க முடியும்.

ஒருவருடைய ரேஷன் அட்டையில் பெயரை நீக்குவதற்கு திருமண சான்று தேவை. உயிரிழந்தவராக இருந்தால் இறப்பு சான்றிதழ் அவசியம். பெயர் நீக்கம் செய்யவும் அதிக காலம் ஆகிறது. இதனால் அந்த ஆவணங்களை வழங்குவதற்கும் பயனாளிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். பெயரை நீக்கவும், புதிய கார்டில் பெயரை சேர்க்கவும் அதிக நாட்கள் ஆவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

2023 ஆம் ஆண்டு 2.9 லட்சம் பேர் ரேஷன் கார்டு விண்ணப்பித்தனர். ஆனால், 1.3 லட்சம் ரேஷன் கார்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செய்யும் தவறால் அனைவரும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, கடுமையான விதிமுறைகளை தளர்த்தி அரசு விரைவில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா..? இதனால் என்ன பயன்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
ஆவணங்கள்தமிழ்நாடு அரசுமகளிர் உரிமைத்தொகை
Advertisement
Next Article