புரோ கபடி!. இன்றுடன் முடிவடையும் ப்ளே ஆப் சுற்றுகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு!. கடைசிவரை பரபரப்பு!
Pro Kabaddi: புரோ கபடி போட்டியன் 11வது தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற 12 அணிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, யுபி யோதாஸ், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் என 5 அணிகள் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இதில் முதல் இடத்தை உறுதி செய்து விட்ட அரியானா ஸ்டீலர்ஸ் அரையிறுதிக்கும் முன்னேறி விட்டது. அதே நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கான எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் யு மும்பா, தெலுங்கு டைடன்ஸ் அணிகள் உள்ளன. டைடன்ஸ் தான் விளையாட வேண்டிய 22 ஆட்டங்களிலும் ஆடி 66 வெற்றிப் புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. யு மும்பா 21 ஆட்டங்களில் விளையாடி அதே 66 வெற்றிப் புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது.
ஆட்டப் புள்ளிகளின் வித்தியாசத்தில் மும்பை 7 புள்ளிகள், டைடன்ஸ் -40புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளன. மும்பை இன்று நடைபெறும் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்றாலும், டிரா செய்தாலும், ஏன் தோற்றாலும் யு மும்பா பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும். அதே நேரத்தில் எதிரணியிடம் 48புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றால் தெலுங்கு டைடன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். வழக்கமாக லீக் சுற்று முடிவடைதற்கு முன்பே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் முடிவாகிவிடும். ஆனால் இந்த தொடரில் லீக் சுற்றின் கடைசி நாள், அதுவும் கடைசி ஆட்டம் வரை யாருக்கு வாய்ப்பு என்ற பரபரப்பு நீடிக்கிறது.