முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புரோ கபடி லீக்!. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை?. செமி பைனலுக்கு நேரடியாக நுழைந்த அரியானா-டெல்லி அணிகள்!

08:31 AM Dec 25, 2024 IST | Kokila
Advertisement

Pro Kabaddi: 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய உ.பி.யோத்தாஸ் ஆட்ட நேர முடிவில் 44-30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 22 போட்டியில் 13 வெற்றி, 6 தோல்வியுடன் (3 சமன்) 80 புள்ளி எடுத்த உ.பி., 3வது இடத்துக்கு முன்னேறியது.

பெங்களூரு அணி (22ல் 2 வெற்றி, 18 தோல்வி, 1 சமன்), 19 புள்ளியுடன் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. தமிழ் தலைவாஸ் அணி, 8 வெற்றி, 13 தோல்வியுடன் (1 சமன்) 50 புள்ளி எடுத்து, 9வது இடம் பெற்று ஏற்கனவே கோப்பை வாய்ப்பை இழந்தது. இந்த லீக் ஆட்டங்கள் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களை பிடித்த உ.பி.யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Readmore: ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!. 15 பேர் பலி!. பதிலடி கொடுக்கப்படும்!. தலிபான் சபதம்!

Tags :
Haryana-Delhi teamsplay-off roundPro Kabaddiqualifiedsemi-finals directly
Advertisement
Next Article