புரோ கபடி!. முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஹரியானா!. பாட்னாவை வென்று அசத்தல்!
Pro Kabaddi: புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் 32-23 என்ற கணக்கில் பாட்னாவை வீழ்த்தி ஹரியானா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
புரோ கபடி லீக் 11வது சீசன் தொடரின் இறுதுப் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 15-12 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ஹரியானா வீரர்கள், பாட்னா அணியினரை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். ஹரியானாவுக்கு 17, பாட்னாவுக்கு 11 புள்ளி கிடைத்தன.
ஆட்டநேர முடிவில் ஹரியானா அணி 32-23 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. புரோ கபடி லீக் வரலாற்றில் அதிகபட்சமாக பாட்னா 3 முறை சாம்பியன் ஆனது. ஜெய்ப்பூர் 2, பெங்கால், பெங்களூரு, டில்லி, புனே, மும்பை தலா ஒரு முறை கோப்பை வென்றன. ஹரியானா அணிக்கு கோப்பையுடன் ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பாட்னாவுக்கு ரூ. 1.80 கோடி கிடைத்தது.
Readmore: 179 பேர் பலி!. உயிர் பிழைத்த அந்த 2 பேர் யார்?. விமான விபத்து எப்படி நடந்தது?. அதிர்ச்சி காரணங்கள்!