Wow...! 6 முதல் 12-ம் வகுப்பு வரை... மாணவர்களுக்கு ரூ.10,000 முதல் பரிசு...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. "தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்று பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்".
இவ்வறிப்பிற்கிணங்க 2024-2025 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.07.2024 தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிக்கான தலைப்புகள்: குமரி தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகும். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7000/-. மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்பெற உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பயிலும் மாணவ / மாணவிகள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.