திரைப்படத்தில் அந்தரங்க காட்சி..!! நடிகர்களின் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும்..!! தமன்னா ஓபன் டாக்..!!
தமிழ், இந்தி, தெலுங்கு மொழியில் அதிக ரசிகர்களை கொண்டு மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. ஹீரோயின், கேமியோ ரோல், கவர்ச்சி டான்ஸ் என ஆள் ரவுண்டராக கலக்கி வருகிறார் தமன்னா. இவர், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர், கடந்த 2005ஆம் ஆண்டு சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். கோலிவுட்டில் கேடி படம் மூலம் அறிமுகமான இவர், கல்லூரி திரைப்படம் தான் இவரை பெரிதும் கவனிக்க வைத்தது. இதைத்தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், திரைப்படங்களில் படமாக்கப்படும் அந்தரங்க காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். திரைப்படத்தில் நெருக்கமான காட்சி மற்றும் ஆண் நடிகர்களின் உணர்வுகள் குறித்து இவர் கூறுகையில், ”அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை.
அதற்கு மாறாக நடிகையை விட அவர்கள் பதட்டமாகவும், சங்கடமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பெண் நடிகை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.20,000 வரை பணம்..!! தமிழ்நாடு அரசு அட்டகாசமான அறிவிப்பு..!!