'வீட்டுக்கு ஒரு விமானம்'... வீதியில் பார்க்கிங்.. வியக்கவைத்த நகர மக்கள்! எங்க இருக்கு தெரியுமா?
உலகில் எத்தனையோ வித்தியசாமான நகரங்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நகரைப் பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்லலாம். இந்த சிறிய நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக தனி விமானம் இருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரூன் ஏர்பார்க் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது. அங்கு வசித்து வரும் மக்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு தனித்தனியாக விமானம் வைத்துள்ளார்கள். கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க்-ல் வசிக்கும் மக்கள் தாங்கள் வேலைக்கு செல்லவும், பிசினஸிற்காகவும் ஆடம்பரமான தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்துகிறார்கள்.
கேமரூன் ஏர்பார்க் போன்ற ரெசிடென்ஷியல் ஏர்பார்க் அல்லது ஃப்ளை-இன் கம்யூனிட்டிஸ் தனியாருக்குச் சொந்தமானவை என கூறப்படுகிறது. இங்கு குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த விமானங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக அங்கு பல ஏர்கிராப்ட் ஹேங்கர்கள் இருக்கின்றன. விமான ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை. கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர்.
இவர்களுடன் சில மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மக்களும் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள். கமரூன் ஏர்பார்க் கடந்த 1963-ல் கட்டப்பட்டது. இங்கே மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறங்க மற்றும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் உள்ள வீதிகளின் பெயர்கள் கூட விமானங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில் தான், இந்த விமான நிலையங்களை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகத்தான் காமரூன் ஏர்பார்க் நகரத்தில் வீட்டுக்கு ஒரு விமானம் நிற்கிறது.
Read more ; நைட்ல லேட்டாதான் சாப்பிடுறீங்களா? ‘புற்றுநோய் ஏற்படுமாம்..!’ நிபுணர்கள் எச்சரிக்கை..