பிரதமரின் முத்ரா திட்டம்...! ரூ.10 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்...!
பிரதமரின் முத்ரா திட்டம் சுய வேலைவாய்ப்பை எளிதாக்குவதற்காக அரசால் தொடங்கப்பட்டது. ரூ.10 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 26.01.2024 வரை 46.16 கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீட்டில், 2021-22 முதல் 5 ஆண்டு காலத்திற்கு அரசால் செயல்படுத்தப்படுகிறது, இது 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் திறன் கொண்டது.
வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன் தயாள் அந்தோதயா யோஜனா, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் கணிசமான முதலீடு மற்றும் பொது செலவினம் சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஊரக சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 3.1 கோடியிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.