முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமர் வீடு கட்டும் திட்டம்... விரைவில் 3 கோடி வீடு...! மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு...!

Government funding for construction of 3 crore rural and urban houses under Prime Minister's Housing Scheme
06:41 AM Jun 11, 2024 IST | Vignesh
Advertisement

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்ட அரசு நிதியுதவி.

Advertisement

தகுதி வாய்ந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கு உதவி வழங்குவதற்காக மத்திய அரசு 2015-16-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியான ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் வீட்டு கழிப்பறைகள், சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு, செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்பு போன்ற பிற அடிப்படை வசதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற திட்டங்களுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், எழும் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய, கூடுதலாக 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு உதவி வழங்க இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
central govthousemodiPM House
Advertisement
Next Article