பிரதமரின் வீடு கட்டும் திட்டம்..!! பணத்தை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓடிய 11 பெண்கள்..!! பரபர சம்பவம்..!!
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு 11 பெண்கள் கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பியோடிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு திட்டம் தான் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் வீடு இல்லா ஏழை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான், திடுக்கிட வைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதாவது, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் முதல் தவணை தொகையை பெற்ற 11 பெண்கள் தங்களின் கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆகி உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஞ் பகுதியில் நடந்துள்ளது. அதாவது, மகாராஜ்கன்ஞ் மாவட்டத்தில் 2,350 பேருக்கு பிரதம மந்திரி அவாஜ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பலரும் தங்களின் வீட்டை கட்டி முடித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் 11 பெண்களுக்கு முதல் தவணையாக ரூ.40 ஆயிரம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை எடுத்து கொண்டு அந்த பெண்கள் தங்களின் கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலர்களுடன் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய 11 பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் இல்லாததால் மேற்கொண்டு வீட்டு வேலையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்டமாக இந்த 11 பயனாளிகளுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வீடு கட்டும் திட்டத்தின் நிதியை எடுத்து கொண்டு பெண்கள் தங்களின் கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பராபங்கி மாவட்டத்தில் இதுபோன்று நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..? என்னென்ன பலன்கள் கிடைக்கும்..? என்ன செய்ய வேண்டும்..?