For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி கரெண்ட் பில் பற்றிய கவலையே வேண்டாம்.. ரூ.78,000 மானியம் தரும் அரசின் சூப்பரான திட்டம்..!

Prime Minister Solar House Free Electricity Scheme.. Rs.78,000 subsidy.. How to apply?
04:34 PM Dec 10, 2024 IST | Mari Thangam
இனி கரெண்ட் பில் பற்றிய கவலையே வேண்டாம்   ரூ 78 000 மானியம் தரும் அரசின் சூப்பரான திட்டம்
Advertisement

நாட்டில் தற்போது பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் சேரும் மக்கள் இந்தத் திட்டங்களின் நேரடிப் பலன்களைப் பெறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி பேசும்போது, அதில் பல வகையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டம்.

Advertisement

பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் நோக்கமே ஒரு கோடி மக்களுக்கு சூரிய மின்சக்தியின் பலன்களை வழங்க வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தில் சேரும் நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும். இதற்காக அரசு சார்பில் மானியத் தொகையும் வழங்கப்படும். சோலார் பேனர்களை நிறுவுவதன் மூலமாக வீட்டுக்கு மின்கட்டணம் செலுத்துவதை முழுமையாகச் சேமிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படும். இந்த பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டம் மூலம் நீங்களும் பயன் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஒருவேளை தெரியவில்லை என்றால், இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற யார் தகுதியானவர்கள் என்பதை இங்கே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள்?: நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டத்தில் சேரலாம். மேலும், சொந்த வீடு இருக்கக்கூடாது. உங்கள் ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

திட்டத்தின் நன்மைகள் : பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் சூரியனில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து சோலார் பேனர் நிறுவியவரின் வீட்டிற்கு மின்சாரம் கிடைக்கும். 1-2 கிலோவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலமாக, 1-150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகள் மின் கட்டணத்தை சேமிக்கலாம்.. இந்த திட்டத்தில் உள்ளவர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, அதன்பின் தனி மானியமும் அரசால் வழங்கப்படுகிறது.

எப்படி பதிவு செய்வது? 

* இதற்காக பிரத்யேகமாக உள்ள இணையதளத்தைப் (https://www.pmsuryaghar.gov.in) பார்வையிடவும்.

* இந்தத் தளத்தில் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மின்சார விநியோக நிறுவனத்தைக் (எ.கா. TANGEDCO) குறிப்பிடவும்.

*பின்னர் உங்கள் மின்சார வாடிக்கையாளர் எண், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை உள்ளிடவும்.

* இந்த விவரங்களை பூர்த்தி செய்த பின்னரே உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

* இது தவிர, இந்த இணையதளத்தில் சோலார் கூரை நிறுவலுக்கு பொருத்தமான விற்பனை முகவர்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

சோலார் பேனல்களை நிறுவுதல்: DISCOM இடம் ஒப்புதல் பெற்ற பிறகு, உங்கள் பட்டியலிடப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே உங்கள் வீட்டில் சூரியஒளி மின்சார தகடை நிறுவ முடியும். இந்த மானியத்தைப் பெற இந்த விற்பனையாளர்களின் அங்கீகாரம் அவசியம்.

Read more ; அதிர்ச்சி..!! ஆன்லைனில் விநாயகரின் உருவம் பதிக்கப்பட்ட காலணிகள், உள்ளாடைகள் விற்பனை..!! கொந்தளிக்கும் இந்துக்கள்..!!

Tags :
Advertisement