For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மண்ணுக்குள் புதைந்து 9 தொழிலாளிகள் உயிரிழப்பு..! பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

Prime Minister Shri Narendra Modi expresses grief over loss of lives in wall collapse incident in Gujarat
07:00 AM Oct 13, 2024 IST | Vignesh
மண்ணுக்குள் புதைந்து 9 தொழிலாளிகள் உயிரிழப்பு    பிரதமர் மோடி ரூ 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Advertisement

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்துக்கு அருகில் கட்டுமானப் பணி நடந்து வந்த இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இடிபாடுகளில் இன்னும் அதிகமானவர்கள் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தலைநகரில் உள்ள காடி என்ற இடத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது மண்சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைத்தனர். தகவலின்படி, 9 முதல் 10 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம். அவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்; குஜராத்தின் மெஹ்சானாவில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து மிகவும் கவலை அளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement