தவறுகள் நடக்கும்.. நான் மனிதன் தான்.. கடவுள் அல்ல..!! - பிரதமர் மோடியின் முதல் போட்காஸ்ட் நேர்காணல்
பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக போட்காஸ்ட் நேர்காணலில் பங்கேற்றார். பிரபல தொழிலதிபரும் ஜிரோதாவின் இணை நிறுவனருமான நிகில் காமத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், நிகில் காமத்தும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த போட்காஸ்டுக்கான டிரெய்லர் வீடியோவை நிகில் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இதை மோடி மறுபதிவு செய்தார்.
இரண்டு நிமிட வீடியோவில், இருவரும் அரசியல், தொழில்முனைவு மற்றும் தலைமைத்துவ சவால்கள் போன்ற பல்வேறு தலைப்புகளைப் பற்றி விவாதித்தனர். நிகில் காமத் பாடலை துவக்கி வைத்து பேசினார். பிரதமரை பேட்டி எடுக்க கொஞ்சம் பயமாக இருக்கிறது’ என்றார். இதற்கு பதிலளித்த மோடி, 'இது எனது முதல் போட்காஸ்ட். இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ தெரியவில்லை' என கூறினார்.
அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த மோடி, "இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், அவர்கள் பொது மக்களுக்கு சேவை செய்ய வர வேண்டும், ஆனால் தங்கள் சொந்த இலக்குகளை நிறைவேற்றுவதற்காக அல்ல," என்று அவர் கூறினார். இதன்போது, குஜராத் முதல்வராக இருந்தபோது பேசிய பழைய பேச்சுக்கள் குறித்து மோடி பேசினார். அப்போது சில தவறுகள் நடக்கும்.. தவறே இல்லாமல் இருக்க நான் கடவுள் அல்ல.. மனிதர் எனக் கூறினார்.
இந்த போட்காஸ்ட் நிகழ்ச்சியில் இரண்டு முறை பிரதமராக இருந்த அனுபவங்களை மோடி பகிர்ந்து கொண்டார். தற்போது இந்த போட்காஸ்ட் பேட்டியின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முழு வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இன்னும் குறிப்பிடவில்லை.
Read more ; 14 வயதில் கல்யாணம்.. குழந்தை வேற இருக்கு.. கள்ளக்காதலனுடன் ஓடிய சிறுமி..!! விசாரணையில் பகீர்..