மகாராஷ்டிரா | NDA கூட்டணி கட்சி எம்.பிக்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!! என்ன காரணம்?
மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்.பி.க்களுடன் பிரதமர், மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் பலர் உடன் இருந்தனர். மாநிலத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு (என்சிபி) கிட்டத்தட்ட 90 இடங்களைக் கோரிய ஒரு நாள் கழித்து இந்த சந்திப்பு வந்துள்ளது. அமித் ஷாவுடனான சந்திப்பின் போது, அஜீத் பவார், சீக்கிரம் சீட் பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்றும், லோக்சபா தேர்தலைப் போல கடைசி நிமிடம் வரை நேரம் தாழ்த்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Read more ; பெண்களே..!! இந்த திட்டங்களில் நீங்களும் இருக்கீங்களா..? அப்படினா உங்களுக்கு ஜாக்பாட் தான்..!!