வாரணாசியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார் பிரதமர் மோடி..!
MODI: இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது.
இதனையடுத்து பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 289 இடங்களிலும், இண்டியா கூட்டணி 236 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 18 இடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 க்கு பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார் பிரதமர் மோடி. 6,12,970 வாக்குகள் பெற்ற பிரதமர் மோடி, 1,52,513 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார். காலை முதல் முன்னிலையில் இருந்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
வாரணாசியில் பிரச்சாரத்தின் போது, மோடி முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் ஊழல் மோசடிகளில் கவனம் செலுத்தினார், மேலும் குஜராத்தில் ஜிடிபி வளர்ச்சியின் உயர் விகிதத்தை உருவாக்கிய ஒரு அரசியல்வாதி என்ரூ தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். வாரணாசியில் நடந்த பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வேட்பாளராகப் போட்டியிட்டு, SP-BSP கூட்டணியின் வேட்பாளராக நின்ற சமாஜ்வாதி கட்சியின் (SP) ஷாலினி யாதவை தோற்கடித்து 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் மோடி.
Read More: தேர்தல் முடிவு தலைகீழாக மாற ஷாருக்கான் தான் காரணமா..? வைரலாகும் பதிவு..!!