முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Modi: சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்...! இன்று சரியான 3.30 மணிக்கு மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி...!

05:50 AM Mar 04, 2024 IST | 1newsnationuser2
Advertisement

இன்று முதல் 6-ம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.

Advertisement

தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் அரசு திட்டங்களை பிரதமர் தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை 10.30 மணியளவில், தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள பாவினி செல்கிறார். அதேபோல மாலை சென்னை நந்தனத்தில் பாஜக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்கிறார்.

அதிலாபாத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் மின்சாரத் துறைக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ. 6,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சங்காரெட்டியில் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்‌.

ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மையப்பகுதியில் கோர் லோடிங் தொடக்கப் (initiation of core loading) பணியைப் பிரதமர் பார்வையிடுவார். ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கொல்கத்தாவில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு இணைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர். பெட்டியாவில் சுமார் ரூ. 12, 800 கோடி மதிப்பிலான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, திறந்து வைக்கிறார். முஸாஃபர்பூர் – மோதிஹரி சமையல் எரிவாயு குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்து, மோதிஹரியில் இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை மற்றும் சேமிப்பு முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Advertisement
Next Article