Wayanad Landslide | நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி..!!
கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த அவர் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
பிரதமர் மோடி தனது தனது பயணத்தில், நிலச்சரிவில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் பிரதமர் சந்திக்கிறார். ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியுடன் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சென்றனர். பின்னர் முதலமைச்சருடன் கலந்துரையாடும் பிரதமர், பல்வேறு நிவாரண குழுக்களையும் சந்திக்கவுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசிடம் 2000 கோடி ரூபாய் சிறப்புத் தொகுப்பைக் கோர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Read more ; இந்தியாவை அதிர வைத்த ஹிண்டன்பெர்க் அறிக்கை..!! அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?