ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. முதலமைச்சரிடம் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி..!!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் புயல் சேத பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை வரலாறு கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடி உள்ள நிலையில், சுமார் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழியுள்ளதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தேசத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு என்.டி.ஆர்.எப் நிதியிலிருந்து உடனடியாக 2000 கோடி அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடைபெறுவதற்காக விடுவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் 50cm மேல் ஒரே நாளில் மழை பெய்தால் அங்கு அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க 38 ஆயிரம் அரசு பணியாளர்களும், ஒரு லட்சத்து 12 ஆயிரம் அனுபவம் பெற்ற மீட்பு படையினரும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனேக இடங்களை நானும் நேரில் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மாநில அரசு தற்போது 2,475 கோடி ரூபாய் இந்த புனரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளதாகவும். ஆகையால் 2000 கோடி NDRFல் இருந்து உடனடியாக அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பினால் ஏற்பட்ட சேதம் குறித்தும், தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் கேட்டறிந்தார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
Read more ; இந்தியாவில் முதல் முறையாக.. படகு புக்கிங் சேவையை தொடங்கியது Uber..!! எங்கெல்லாம் தெரியுமா?