முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமர் மோடி - அதிபர் முய்சு சந்திப்பு!. இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து!.

Prime Minister Modi - President Muisu meeting!. India-Maldives signed an agreement worth Rs.3,000 crore!
08:37 AM Oct 08, 2024 IST | Kokila
Advertisement

India-Maldives: இந்தியா, மாலத்தீவு இடையே ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Advertisement

4 நாள் அரசு முறைப் பயணமாக மாலத் தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வந்துள்ளார். நேற்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய முகமது மூய்சு, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். பின்னர், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத் தீவு அதிபர் முகமது முய்சுவைச் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அதிபர் முய்சுவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, மாலத்தீவு இந்தியாவுடன் எப்போதும் நட்பு பாராட்டி வருகிறது. மாலத்தீவுக்கு ஏதாவது பிரச்சினை, மருத்துவ உதவி தேவையென்றால் எப்போதும் உதவும் முதல் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவே மாலத்தீவு பார்க்கப்படுகிறது. இந்திய பெருங் கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாலத்தீவு பெரும் பங்கு வருகிறது. மாலத்தீவில் விமான நிலையத்தைத் தொடங்கி வைத்த இந்தியா, அங்கு 700 சமூக வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இந்தியா மற்றும் மாலத்தீவு உறவு பல நூற்றாண்டுகள் பழமை யானது. இது வரும் காலங்களிலும் தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபர் முய்சு முன்னிலையில் இந்தியா, மாலத்தீவு இடையே ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறியதாவது: மாலத்தீவின் சமூக-பொருளா தார மற்றும் உள்கட்டமைப்பு மேம் பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மாலத்தீவுக்கு இந்தியா எப்போதுமே மதிப்புமிக்க நட்பு நாடாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப் புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தச்செயலையும் மாலத்தீவு எப்போதும் செய்யாது. இவ்வாறு அதிபர் முய்சு தெரிவித்தார். மேலும், இந்தியாவின் ரூபே கார்டுகள், மாலத்தீவுகளில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Readmore: ஹாங்காங் சிக்ஸ் தொடரில் களமிறங்கும் இந்தியா!. வைடு, நோ-பால்-க்கு 2 ரன்கள்!. விதிகள் என்னென்ன தெரியுமா?

Tags :
India-MaldivesPrime Minister Modi - President Muisurs.3000 croresigned an agreement
Advertisement
Next Article