பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!. இருதரப்பு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது!.
PM Modi - Joe Biden: இந்தியாவுடனான அமெரிக்காவின் கூட்டாண்மை வரலாற்றில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தச் சந்திப்பு மிக பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ட்விட்டரில், இந்தியாவுடனான அமெரிக்காவின் கூட்டாண்மை வரலாற்றில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது. பிரதமர் மோடி, நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், ஒத்துழைப்பின் புதிய பகுதிகளைக் கண்டறியும் திறன் என்னைக் கவர்ந்தது. இன்றும் வித்தியாசமாக எதுவும் இல்லை.
Readmore: ஒரே நாளில் 37 மீனவர்கள் கைது… இலங்கை அட்டூழியத்திற்கு உடனே முற்றுப்புள்ளி..! டிடிவி கோரிக்கை