Annamalai: இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!… இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்!… அண்ணாமலை ட்வீட்!
Annamalai: இதுதாங்க நேரம் – இனி எல்லாம் மாறும் என்று குறிப்பிட்டு தமிழக மக்கள் அனைவரும், தங்கள் வீட்டு விழாவினைப் போல, குடும்பத்துடன் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்க வேண்டும் என்று என்று தமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்றுடன் என் மண் என் மக்கள் நிறைவு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X பதிவில், மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை என இந்த தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கூட திமுக நிறைவேற்றவில்லை, தமிழகத்தின் சுகாதாரம், கல்வி, காவல் துறை என அத்தனை துறைகளையும் சரிப்படுத்த வேண்டும். குடும்ப அரசியலை அகற்றி, சாமானிய மக்களுக்கான, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சியைக் கொண்டு வரவேண்டும்.
70 ஆண்டு கால திராவிட அரசியலில், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றியது தான் மிச்சம். நேர்மையான நல்லாட்சி என்பதை தமிழகம் காண திராவிடக் கட்சிகள் வாய்ப்பளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சிக்கு, தமிழகமும் துணையிருக்க வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.
சமையல் எரிவாயுவிற்கு ரூ.100 மானியம் என்று வாக்குறுதி கொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியிருக்கிறது. நகைக்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, கோவிட் தொற்று காலத்தில் பாதிப்படைந்த தொழில்முனைவோர்களுக்கு இழப்பீடு, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4,000 ஆக உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாணவ மாணவியருக்கு 4G, 5G டேப்லட், மீனவப் பெருமக்களுக்கு 2 லட்சம் வீடுகள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம், என எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
இன்று, நமது என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க, வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இந்த யாத்திரை நடப்பதற்கு காரணமாகவும், உத்வேகமாகவும் விளங்கும் தமிழக மக்கள் அனைவரும், தங்கள் வீட்டு விழாவினைப் போல, குடும்பத்துடன் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் 232 தொகுதிகளை கடந்து விட்டோம். கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம். இதுதாங்க நேரம் – இனி எல்லாம் மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Readmore: மின் இணைப்புடன் Aadhaar எண்ணை இணைப்பது எப்படி..? நீங்களே வீட்டிலிருந்து செய்யலாம்..!!