நிர்மலாவை குறுக்கிட்ட பிரதமர் மோடி!… பதற்றமடைந்த பாஜக நிர்வாகிகள்!… தேசிய கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பு!
டெல்லியில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி போட்ட திடீர் கவுன்சிலால் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பெரும் பரபரப்படைந்தனர்.
மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி உட்பட எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். தமிழ்நாட்டில் பிறந்து ஆந்திராவில் திருமணம் முடித்து கர்நாடகாவின் ராஜ்யசபா எம்பியாகி இருப்பவர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாடு சார்ந்த விவகாரங்களுக்கு பாஜகவின் மேலிடப் பிரதிநிதியாக, மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படுகிறவர் நிர்மலா சீதாராமன். பாஜக கவுன்சில் கூட்டத்திலும் தமிழ்நாட்டு நிலவரம், தமிழ்நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆங்கிலத்தில் நிர்மலா சீதாராமன் பேசினார்.
நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் பேசி முடிக்கும் வரை பிரதமர் மோடி பொறுமையாக இருந்தார். அவர் தமது உரையை முடித்த போது பிரதமர் மோடி குறுக்கிட்டு, நீங்க்தான் தமிழ்நாட்டுக்காரராச்சே.. தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் வந்துள்ளார்கள்.. நீங்கள் அவர்களுக்காக தமிழில் பேசுங்க.. அதுதான் அவங்க எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என திடீரென உத்தரவிட்டார். இதனால் ஒருநிமிடம் திகைத்துப் போனாராம் நிர்மலா சீதாராமன். இதன் பின்னர் தாம் ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே விவரமாக தமிழிலும் விளக்கினாராம் நிர்மலா சீதாராமன். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.