முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’30 வினாடிகளில் தாயை அவமானப்படுத்திய பிரதமர் மோடி’..!! ’இமயமலையில் அமர்ந்து தியானம் செய்யுங்க’..!! விளாசிய காயத்ரி ரகுராம்..!!

Gayatri Raghuram criticizes PM Modi for humiliating mother in 30 seconds
10:14 AM May 23, 2024 IST | Chella
Advertisement

தான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டேன் என்று என பேசி தன்னை 'கடவுளின் அவதாரம்' என்று மோடி சொல்லிக் கொள்கிறார் எனவும், அவர் தனது தாயை 30 வினாடிகளில் அவமானப்படுத்திவிட்டதாகவும் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

Advertisement

ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேசிய பிரதமர் மோடி, “நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். நான் மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது அந்த பரமாத்மா தான். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்" என பேசியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் பேச்சை முன்னாள் பாஜக நிர்வாகியும், தற்போது அதிமுகவில் இணைந்து மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கும் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், ”நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை. நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டேன் என்று நான் நம்புகிறேன்" தன்னை 'கடவுளின் அவதாரம்' என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்கிறார். அவர் தனது தாயை 30 வினாடிகளில் அவமானப்படுத்தியுள்ளார்.

அனைத்தும் அதிகாரத்திற்காகத் தான். தன்னை காசி விஸ்வநாதரை விட பெரிய ஆண்டவனாக நினைக்கிறார் பிரதமர் மோடி. இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் வாரணாசியில் அவர் வெல்லக் கூடாது. மாறாக இமயமலையில் அமர்ந்து தன்னையே கடவுளாக நினைத்து கற்பனை செய்து கொண்டு தியானம் செய்ய வைக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Read More : மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை கிடைக்கும்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!

Advertisement
Next Article