For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Rahul Gandhi: கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி...!

06:10 AM Apr 12, 2024 IST | Vignesh
rahul gandhi  கோடீஸ்வரர்களுக்கு ரூ 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி
Advertisement

வெகு சில கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தார் பிரதமர் மோடி. இந்த தொகையை வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 24 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி இருக்கலாம் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என நமது விவசாயிகள் கேட்கிறார்கள். வேலைவாய்ப்பு வேண்டும் என நமது இளைஞர்கள் கேட்கிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என நமது பெண்கள் கேட்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்கும் விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் என்கிறார்.

அதே போல, வெகு சில கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தார் பிரதமர் மோடி. இந்த தொகையை வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 24 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி இருக்கலாம். காங்கிரஸின் திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் என கேட்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது. 'நண்பர்களுக்கு பாசம்' காட்டியது போதும். சாமானிய மக்களுக்காக அரசு கஜானாவை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஊடகங்கள் வெறும் 15 முதல் 20 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்கள் இரவும் பகலும் நரேந்திர மோடியை புகழ்ந்து பாடுகிறார்கள். ஊடகங்களில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் முகத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.

Tags :
Advertisement