முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"வரலாற்று சிறப்புமிக்க வெற்றி" உலக செஸ் சாம்பியனான குகேஷ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

Prime Minister Modi congratulates world chess champion Gukesh on his 'historic victory'.
08:11 PM Dec 12, 2024 IST | Kathir
Advertisement

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர். இந்த போட்டியில் சீன வீரர் டிங் லிரனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் ஆகியிருக்கிறார்.

Advertisement

14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற 4-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை சமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து, 11-வது சுற்று வரும் சிறப்பாக விளையாடிய குகேஷ் வெற்றிபெற்றார்.

அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும் வெற்றிபெற்றார். அதன்பின் நேற்று நடைபெற்ற 13-வது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியை பெற்றுக்கொண்ட நிலையில், 13-வது சுற்றுமே சமநிலையில் தான் முடிந்தது. எனவே, இருவரும் சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால் 14-வது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர் எனவும் நேற்று கூறப்பட்டது.

இந்த நிலையில், 14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றிருக்கிறார். 18 வயதான தமிழக வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ்க்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடியின் பதிவில், "வரலாற்று சிறப்புமிக்க முன்மாதிரியான வெற்றி பெற்ற குகேஷுக்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு.

அவரது வெற்றி, செஸ் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான இளைஞர்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கிறது. குகேஷின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More: “ஒரே நாடு ஒரே தேர்தல்” ஜனநாயகத்திற்கு எதிரானது…! முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு..!

Tags :
gukeshmodi wishes gukesh
Advertisement
Next Article