அபுதாபி: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் 'HELLO MODI 'நிகழ்ச்சி, கோவில் திறப்பு விழா பற்றிய முழு விவரங்கள்.!
அபுதாபிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கு புதிதாக கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய இந்து கோவிலை திறந்து திறந்து வைத்து ஷேக் சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக நிகழ்ச்சிக்கான நேரம் மற்றும் கலந்த உள்ள இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரி தெரிவித்திருக்கிறார். தற்போது அங்கு நிலவும் மோசமான வானிலை மற்றும் மின்னல் காரணமாக 80,000 பார்வையாளர்கள் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி தற்போது 37 ஆயிரம் பார்வையாளர்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது என நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த சஜீவ் புருஷோத்தமன் பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 60,000 பேர் இணையதளம் மூலம் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த புருஷோத்தமன் இந்த நிகழ்ச்சியில் 35,000 முதல் 40,000 பேர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அபுதாபியில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் விளையாட்டு மைதானத்தில் 1,000-திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் 45,000 பேர் கலந்து கொள்வார்கள் என அபுதாபியில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்டில் 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். திங்கள் கிழமை காலை முதல் வானிலை எச்சரிக்கை இங்கு விடப்பட்டிருக்கிறது . நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதோடு சில இடங்களில் பனிப்பொழிவு இருந்ததாகவும் அங்குள்ள வானிலை அறிக்கை தெரிவிக்கிறது . இதன் காரணமாக பல்வேறு எச்சரிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அங்குள்ள அரசு அறிவித்துள்ளது. மேலும் வாகனங்களுக்கும் புதிய வேக கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது போன்ற வானிலை சூழ்நிலை காரணமாக பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிக்கான நேரமும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை அபுதாபி செல்ல இருக்கிறார். இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர் பிப்ரவரி 14-ஆம் தேதி அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய இந்து கோவிலான போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவிலை திறந்து வைக்க இருக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாரம்பரியமிக்க இந்து கோவிலான இது துபாய் அபுதாபி தேசிய நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவுக்கு அருகிலுள்ள அபு முரைக்காவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த கோவிலுக்கான இடத்தை ஐக்கிய அரபு எமிரேட் அரசு நன்கொடையாக வழங்கியது. பாரம்பரியமிக்க கட்டிடக்கலையுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த கோவில் வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்ட பெரிய இந்து கோவிலாகும்.