பங்குச்சந்தை முதலீட்டில் ரூ.30 லட்சம் கோடியை இழக்க பிரதமர், அமித்ஷாவே காரணம்..!! குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி..!!
இந்திய பங்குச் சந்தை கடந்த ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிட்ட நாளில் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக, 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் சுமார் ரூ.30 லட்சம் கோடி வரை இழப்பைச் சந்தித்ததாக ராகுல் காந்தி பேசியுள்ளார். ரூ.30 லட்சம் கோடியை இழக்க முக்கியமான காரணம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். இருவரும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து கொடுத்த ஆலோசனைகள் பற்றி ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
* பங்குச் சந்தை முதலீடு குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் ஆலோசனை வழங்க வேண்டும்..? இது குறித்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால், அரசியல் தலைவர்கள் இது போன்ற முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது பொருத்தமானதா?
* பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் ஒரே ஊடக நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். குறிப்பாக, இந்த ஊடக நிறுவனம் செபி (SEBI) விசாரணையில் உள்ள அதே தொழில் குழுமத்தைச் சேர்ந்தது. அந்த குழுமம் பங்குச் சந்தையை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது, கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
* பாஜகவுக்கும், போலி எக்சிட் போல் வாக்கு எண்ணிக்கைக்கும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? எக்சிட் போல் வாக்கு எண்கள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்த இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். அதே நேரத்தில், 5 கோடி குடும்பங்கள் இழப்பு அடைந்துள்ளன. பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
* இந்த மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சரிவில் நடந்த முறைகேடுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Read More : தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?