வியர்க்குருவை விரட்டும் ஆயுர்வேதம்...வியக்குருவில் இருந்து குழந்தைகள் விடுபட வழிமுறைகள்.....
கோடை காலம் என்றாலே அனைவருக்கும் வியக்குரு பிரச்சனை வந்துவிடுகிறது. முக்கியமாக குழந்தைகள் இந்த பிரச்சனைகளால் மிகவும் அவதிப்படுகின்றனர். தோல் பிரச்சனைகளில் முக்கியமான வியர்க்குரு, முகம், கழுத்து, முதுகு, மார்பு மற்றும் தொடைகள் போன்ற இடங்களில் ஏற்பட்டு அதிக அரிப்பையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது. வியர்வை சுரப்பிகள் தடுக்கப்படும்போது, இந்த தடிப்புகள் ஏற்படுகிறது. அதிகப்படியான வியர்வை, பாக்டீரியா மற்றும் பிற ஆபத்து காரணிகளால் மயிர்க்கால்கள் வழியாக வியர்வை வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது.
இந்த வியக்குருவை ஆயுர்வேதம் மூலம் எளிய முறையில் விரட்டியக்கலாம். அதன்படி, கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் இரண்டுமே உடலுக்கு குளுமையானது. ஆகையால், கற்றாழை ஜெல் 2 டீஸ்பூன் மற்றும் வெள்ளரிக்காய் சாறு 4 டீஸ்பூன் கொண்டு, இரண்டையும் நன்றாக கலந்து, வியக்குரு இருக்கும் இடத்தில் தடவி கொள்ளவும். பிறகு, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால், சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க செய்வதோடு சருமத்தில் தடிப்பு, சிவப்பு, சொறி போன்றவற்றையும் தணிக்க உதவுகிறது.
அருகம்புல், வெட்டிவேர் இரண்டையும் மைய அரைத்து இறுதியாக சந்தனம் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும். தண்ணீருக்கு மாற்றாக பன்னீர் சேர்க்கலாம். அதன் பிறகு, இதை வியர்க்குரு இருக்கும் இடங்களில் தடவி உலரும் வரை வைத்திருந்த பிறகு, குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யுங்கள். இது நறுமணத்தையும், குளிர்ச்சியையும் அளிக்கும். இதன் மூலம் வியர்க்குரு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த உதவுகிறது. இந்த கோடைக் காலத்தில் இந்த ஆயுர்வேத முறையை பயன்படுத்தி உடலை பத்திரமாக பாதுக்காத்து கொள்ளுங்கள்.