வணிக சிலிண்டரின் விலை ரூ.101 உயர்வு..!
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண் ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று (நவம்பர்.1) சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவித்துள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.101 உயர்ந்து ரூ.1999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ரூ.1898 ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.1999 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சேப்டர் மாதம் ரூ.1695 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் ரூ.203 உயர்ந்து ரூ.1898-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது நவம்பர் மாதத்தில் மேலும் ரூ.101 உயர்ந்து ரூ.1999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைத்து மத்திய அரசு. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதனபடி செப்டம்பரில் 1100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டு அக்டோபர் மாதம முதல் ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.