மகிழ்ச்சி செய்தி...! 25 கிலோ அரிசி மூட்டை விலை ரூ.200 குறைந்தது...!
ரூ. 58 ஆக இருந்த புழுங்கல் அரிசி விலை கிலோ 49 ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த அரிசி விலை தற்போது குறைய தொடங்கியது. பருவமழை பொய்த்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில், தற்போது அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கணிசமாக குறைந்துள்ளது. சந்தையில் புழுங்கல் அரிசி விலை கிலோ 8 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இதன் மூலம் 25 கிலோ மூட்டை அரிசிக்கு 200 ரூபாய் குறைந்ததது. கடந்த பிப்ரவரி மாதம் புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு ரூ. 58 ஆக இருந்தது. இப்போது 49 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புழுங்கல் அரிசியின் விலை குறைவாக இருந்தாலும் அதை பெரும்பாலும் ஹோட்டல் உரிமையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும், அரிசி இருப்பு அளவை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அரிசி விலை சற்று குறைந்துள்ளது. மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி' Amazon போன்ற இணைய வழியிலும் விற்பனை செய்யப்படுகிறது.