முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று முதல் Paracetamol உள்ளிட்ட மாத்திரைகளின் விலை உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

07:03 AM Apr 01, 2024 IST | Chella
Advertisement

ஆன்டிபயாடிக், பெயின்கில்லர் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை, இன்று முதல் உயரும் என என்.பி.பி.ஏ. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் ஆண்டு மாற்றத்திற்கு ஏற்ப, தேசிய பட்டியலின் கீழுள்ள அத்தியாவசிய மருந்துகளுக்கு, 0.0055 சதவீதம் விலை மாற்றம் செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதனையடுத்து, பாராசிட்டாமல், அசித்ரோமைசின், வைட்டமின், மினரல்ஸ் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகள், இந்த புதிய விலையின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருந்துகளின் விலை கடந்தாண்டு 12 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ”பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More : Tollgate: தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் அமல்!… அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

Advertisement
Next Article