பொதுமக்கள் கவனத்திற்கு...! போதை தடுப்பு... 1933 என்ற உதவி எண் மத்திய அரசு அறிமுகம்...!
சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன் 112-வது நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்; ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட உள்ளோம். அதோடு ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தையும் கொண்டாட உள்ளோம். இதையொட்டி நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறி, கதர் ஆடைகளை அதிக அளவில் வாங்க வேண்டுகிறேன். நாடு முழுவதும் காதிப் பொருட்களின் விற்பனை சுமார் 400 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி உள்ளன என்றார்.
அம்மாவின் பெயரில் ஒரு மரக்கன்றை நட வேண்டும் என்றுஅழைப்பு விடுத்தேன். இந்த இயக்கத்தின்படி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்று நடும் இயக்கத்தோடு நாட்டு மக்கள் அனைவரும் இணைய வேண்டும். நாட்டின் சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. இதையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிடும் இயக்கம், மிகப்பெரிய விழாவாக மாறிவிட்டது. வழக்கம்போல இந்த ஆண்டும் வீடுகளில் தேசிய கொடியேற்றி harghartiranga.com இணையத்தில் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டுகிறேன். மேலும் போதை தடுப்பு திட்டம் போதை பழக்கத்தை தடுப்பதற்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் மானஸ். 1933 உதவி எண்ணில் இந்த மையத்தை தொடர்பு கொண்டால் போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் அளிக்கப்படும் என்றார்.