பல் வலி அடிக்கடி வருதா? உங்க குழந்தைளின் பற்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..
நாம் பற்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால், பற்கள் புழுக்களால் பாதிக்கப்படுகின்றது, இதனால் தான் பல் வலி, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்காக, விளம்பரங்களை நம்பி அதிக விலை கொடுத்து சந்தையில் விற்கப்படும் பேஸ்ட்டை வாங்குகிறோம். ஆனால், உண்மையில் அந்த பேஸ்ட் உங்களுக்கு நிரந்தர நிவாரணம் தருகிறதா? பேஸ்ட்டே பயன்படுத்தாத நமது முன்னோர்களின் பற்கள் எத்தனை ஸ்ட்ராங் ஆக இருந்தது என்று நமக்கே தெரியும். இதனால் கண்ட விளம்பரங்களை நம்பி இனி ஏமாற வேண்டாம். இது போன்ற பல் வலிக்கு வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து வீட்டு வைத்தியம் செய்வது தான் சிறந்தது.
பொதுவாக ஒருவரின் அழகு என்பது அவர்களின் சிரிப்பு தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலானோர் தங்களின் பற்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இதனால் தான் நம்மில் பலருக்கு பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. உங்கள் பற்களில் கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகள் இருந்தால், அல்லது ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு இருந்தால் உங்கள் பற்கள் மோசமான நிலையில் உள்ளது என்பது அர்த்தம். இதற்க்கு நீங்கள் உடாடியாக கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம், நாம் விரும்பி சாப்பிடும் இனிப்புகள் மற்றும் ஜங்க் உணவுகள் தான்.
சாப்பிட்ட பிறகு நமது பற்களில் ஒட்டியிருக்கும் உணவு, பற் சிதைவு மற்றும் ஈறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வாயை சுத்தம் செய்வது அவசியம். முடிந்தால், சாப்பிட்ட பிறகு ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ் பயன்படுத்துவது நல்லது. இதனால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க முடியும்.. நாம் பகல் முழுவதும் பலவிதமான உணவுகளை சாப்பிட்ட பிறகு, வாயில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளரும்.இதனால் இரவு தூங்க செல்வதற்கு முன், கட்டாயம் பல் துலக்க வேண்டும். இதனால் உங்கள் பற்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
இது பெரியவர்களுக்கு மட்டும் கிடையாது. சிறுவர்களுக்கும் தான். பெரியவர்களை விட சிறியவர்களுக்கு தான் இந்த பாதிப்பு அதிகம். இதனால் கட்டாயம் உங்கள் குழந்தைகளை இரவு தூங்க வைப்பதற்கு முன்பு பல் துலக்க கற்றுக்கொடுங்கள். இல்லையென்றால், பற்கள் பழுதாகி கருப்பாக மாறிவிடும். ஒரு சிலர் பல் வலிக்கு மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. இதனால் பக்கவிளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு பதில் நீங்கள், பல் வலிக்கு வீட்டு வைத்தியமாக, உப்பு நீரில் வாய் கொப்பளித்தல், கிராம்பு எண்ணெய், குளிர் ஒத்தடம், மஞ்சள் பேஸ்ட், டீ பேக் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.