உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy விரைவில் இந்தியா வருகை!. தூதர் வெளியிட்ட தகவல்!
Volodymyr Zelenskyy: இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தியா வரக்கூடும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் பொலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்களுக்கு மத்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைக்குபிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டார். உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை. அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது' என, சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கெண்டு வருவதற்கான முயற்சியை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கான உக்ரைன் தூதரக அதிகாரி ஒலிக்ஸாண்டர் பொலிஷ்செவுக் வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த அமைதி உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று உக்ரைன் நம்புகிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடி அதில் கலந்து கொள்ள நேரம் கிடைத்தால், தனது நாடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும், அவரது குரல் "உலகில் மிகவும் மதிக்கப்படுகிறது" என்றும் கூறினார்.
மேலும், கடந்த ஆக. 23-ம் தேதி இந்திய பிரதமர் மோடி உக்ரைன் வருகை தந்தார். அப்போது பரஸ்பரம் நட்புறவு மேம்பட இந்தியா வருமாறு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தார். அதனை அதிபர் ஏற்றுக்கொண்டார். இந்தாண்டு இறுதியில் அரசு முறைப்பயணமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்தியா வர வாய்ப்புள்ளது என்றார்.
Zelenskyy ன் இந்தியப் பயணம் எங்கள் இருதரப்பு உறவில் மற்றொரு படியாக இருக்கும், மேலும் இரு தலைவர்களும் உலகெங்கிலும் உள்ள அமைதியை கட்டியெழுப்பும் செயல்முறை குறித்த விவாதத்தில் அதிக நேரம் செலவிட இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, உக்ரைனுக்கு பிரதமர் மோடியின் பயணம் ஒப்பீட்டளவில் குறுகியதாக இருந்தது.
பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக, இங்கே இந்தியாவில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்தியாவுக்கு வருவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார் என்பதை நான் நிச்சயமாக அறிவேன் என்று தெரிவித்துள்ளார், ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு மத்தியில் விரைவில் அமைதி திரும்புவதற்கு அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் இலவங்கப்பட்டை..!! எப்படி பயன்படுத்துவது..? செம ரிசல்ட்..!!