For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பிரதமரின் விளம்பர தூதுவரா ஜனாதிபதி.?.." பட்ஜெட் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் கேள்வி..!!

03:24 PM Feb 03, 2024 IST | 1newsnationuser7
 பிரதமரின் விளம்பர தூதுவரா ஜனாதிபதி      பட்ஜெட் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் கேள்வி
Advertisement

2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இந்திய வரலாற்றிலேயே கேவலமான பட்ஜெட் இதுதான் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு கட்சியினரும் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜனாதிபதியின் உரையை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் உரை, ஆளும் கட்சியினரின் விளம்பர தூதுவர் போல இருக்கிறது என விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் " பட்ஜெட் கூட்டத் தொடருக்கான ஜனாதிபதியின் உரை பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் பேச்சாகவே இருந்தது. அவரது பேச்சில் வேலை வாய்ப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி பற்றிய விளம்பரம் மற்றும் அரசியல் பேச்சாகவே அமைந்தது. இது பொதுமக்களை வலையில் சிக்க வைப்பதற்கான ஒரு யுக்தி" என தெரிவித்திருக்கிறார்.

Tags :
Advertisement