முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீன ஆதரவு கட்சி வெற்றி!

12:31 PM Apr 22, 2024 IST | Mari Thangam
Advertisement

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Maldivian President Muizzu: சமீப காலமாக இந்தியா- மாலத்தீவு நாடுகள் இடையேயேன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சித்தனர். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்திவுக்கு இந்தியர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என சினிமா பிரலங்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மாலத்தீவின் 20 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றது. இது நாடாளுமன்றத்தில் 3 -ல் 2 பங்காகும். முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதால் முகமது முய்சு அரசுக்கு கூடுதல் பலமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் கொண்டவர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு சீன ஆதரவு செயல்பாட்டை அதிகமாக முன்னெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

Tags :
#chinaindiaMALDIVES electionPresident Mohamed Muisu's
Advertisement
Next Article