24 உளவுத்துறை அதிகாரிகளை கடித்த அதிபர் பைடனின் நாய்!… சுட்டுக்கொல்லப்பட வேண்டும்!
Biden's Dog: 24 உளவுத்துறை அதிகாரிகளை அதிபடி பைடனின் வளர்ப்பு நாய் கடித்ததாக எழுந்த புகாரை அடுத்து அதனை சுட்டுக்கொல்லப்படவேண்டும் என்று தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2 வயதே ஆன அந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய், 24 உளவுத்துறை அதிகாரிகளை கடித்துள்ளதாக புகார் எழுந்ததால் கடந்தாண்டு இறுதியில் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளரும், தெற்கு டகோட்டா மாநில ஆளுநருமாக கிறிஸ்டி நோம் பதவி வகித்து வருகிறார். இவர், அண்மையில், ஒரு வயதான தனது வளர்ப்பு நாய் மற்றவர்களை கடித்ததால் சுட்டுக்கொன்றதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், 24 உளவுத்துறை அதிகாரிகளை அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் கடித்ததாக எழுந்த புகாரை அடுத்து, பைடனின் நாயும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: மீண்டும் புதின்!… 71 வயதில் 5வது முறையாக ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றார்!