இனி மருந்து சீட்டுகளில் கையால் எழுதக்கூடாது!… மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டை கையால் எழுதாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பல சந்தர்ப்பங்களில், மருத்துவர்களின் கையெழுத்து புரியாமல் தவிக்கின்றனர். இதுதொடர்பாக ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பனிகிராஹி, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. உடல் பிரேத பரிசோதனை அறிக்கையையும் கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து , கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.