முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீடே மணக்கும் சாம்பிராணியை, இனி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. எப்படி தெரியுமா?

prepare incense stick with dry flowers
06:01 AM Dec 23, 2024 IST | Saranya
Advertisement

நம்மில் அநேகர் பூஜை, விழாக்கள் ஆகியவற்றிக்கு நாம் பயன்படுத்திய பூக்களை அப்படியே குப்பையில் போடுவது உண்டு. குறிப்பாக மாலைகளில் இருக்கும் பூ பெரும்பாலும் குப்பையில் தான் இருக்கும். இனி அந்த பூக்களை வீணாக்க வேண்டாம். காய்ந்த பூவை வைத்து நாம் என்ன செய்வது என்று யோசிக்கலாம்.. ஆனால் நாம் காய்ந்து போன பூக்களை வைத்து, வீட்டிலேயே வாசமான சாம்பிராணி தயார் செய்யலாம். ஆம், உண்மை தான் நாம் விலை கொடுத்து கடையில் வாங்கும் சாம்பிராணியை இனி நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Advertisement

இதற்கு முதலில் வீட்டில் பயன்படுத்தப்படும் பூக்களை சேகரித்து வைத்து கொள்ளுங்கள். ஈரப்பதம் சிறிது கூட இல்லாத நன்கு காய்ந்த பூக்களுடன் வெட்டிவேர் மற்றும் காய்ந்த வெற்றிலையையும் மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி விடுங்கள். இப்போது மிக்ஸியில், சம்பங்கி, 10 ஏலக்காய், 10 கிராம், கொஞ்சம் பச்சை கற்பூரம், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து அரைத்து விடுங்கள். பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்துவிடுங்கள். இந்த கலவையில், இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது இதில், தண்ணீர், பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் ஆகியவை சேர்த்து புட்டு மாவு பதத்தில் பிசைந்து எடுக்க வேண்டும். பின்னர் இதனை உங்களுக்கு விருப்பமான வடிவிற்கு பிடித்து கொள்ளவும். இப்போது இதனை ஈரப்பதம் இல்லாமல், மூன்று நாட்களுக்கு வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். அப்படி ஈரப்பதம் இருந்தால் சாம்பிராணி புகையாது. இப்போது நன்கு காய்ந்த சாம்பிராணியை நீங்கள் பூஜைக்கு, வீட்டு நறுமனதிர்க்கு பயன்படுத்தலாம்... நல்ல மனமுடன் கடையில் வாங்கும் சாம்பிராணி போலவே இருக்கும்.

Read more: வறண்டு போன உங்கள் பாதங்களை ஒரே இரவில் மென்மையாக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்..

Tags :
drieddry flowersHome madeincense stick
Advertisement
Next Article