கர்ப்பிணி பெண்கள் இந்த மூலிகையை மறந்தும் கூட சாப்பிட கூடாது.! ஏன் தெரியுமா.!
பொதுவாக நம் தமிழ்நாட்டில் பல்வேறு வகையான மூலிகைகள் இருந்து வருகின்றன. இந்த மூலிகைகளில் பல நோய்களை தீர்க்கும் அதிசய பண்புகளும் இருக்கின்றன. அந்த வகையில் நாயுருவி செடி எனப்படும் மூலிகை பல வகையான நோய்களை தீர்க்கும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டு வைத்துள்ளனர். குறிப்பாக ஆயுர்வேத மருத்துவ முறையில் இந்த நாயுருவி மூலிகை அருமருந்தாக பயன்படுகிறது. கசப்பு, துவர்ப்பு மற்றும் காரதன்மையுடைய இந்த செடி என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை குறித்து தெளிவாக பார்க்கலாமா?
1. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாயுருவி செடியின் இலையை அரைத்து சாறு கொடுத்தால் கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் நீங்கி கர்ப்பப்பை வலுவடையும்.
2. நாயுருவி இலையின் சாறு நரம்புகளை வலுவாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
3. உடலில் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றை கட்டுப்படுத்தி சிறுநீரை அதிகமாக்குகிறது.
4. வாந்தி பேதி, சீதபேதி, காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.
5. நாயுருவி செடியின் இலையையும், காராமணி பயிரையும் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களுக்கு தொப்புளில் பற்று போட்டால் நீர் கட்டு குணமாகும்.
6. காது வலி, காது குடைச்சல், காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் நாயுருவி செடியின் இலையை அரைத்து சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் ஊற்றினால் பிரச்சனை குணமாகும்.
7. இரத்த மூலநோய் உள்ளவர்கள் நாயுருவி இலையை அரைத்து எருமை தயிரில் கலந்து குடித்து வந்தால் நோய் விரைவில் குணமாகும்.
8. சொத்தை பல், பல் வலி, பல் கூசுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் நாயுருவி இலையை வாயில் போட்டு மென்று வர பல் வலிமையாகும்.
குறிப்பாக இவ்வாறு பல்வேறு நண்மைகளையுடைய மூலிகையை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக நாயுருவி இலையை பயன்படுத்த கூடாது. இது கர்ப்பத்தை கலைக்கும் தன்மையை கொண்டது என்று சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.