கர்ப்பிணிகள் காபி அதிகம் குடித்தால் வரும் பேராபத்து!!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..
பொதுவாக யார், எப்போது, எதை சாப்பிட்டாலும், அது நமது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்று சிந்தித்து தான் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிட்டாலும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் அநேக கர்ப்பிணிகளுக்கு காபி குடிக்கலாமா என்ற சந்தேகம் இருப்பது உண்டு. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளதா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
12,000 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வரிக்கையின் படி, கர்ப்பிணி பெண்கள் அதிகம் காபி குடித்தால் அது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், காபி அதிகம் குடிப்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், கர்ப்ப காலத்தில் அதிகம் காஃபின் எடுத்துக் கொண்ட கர்ப்பிணிகளின் குழந்தைகள், 9-11 வயதிலேயே அதிக உடல் எடை உடையவர்களாக மாறிவிடுகின்றனர்.
மேலும், காபி அதிகம் குடித்த கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு மூளையில் உள்ள இன்சுலா என்ற பகுதி தடிமனாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக நாங்கள் காப்பியே குடிக்க கூடாதா என்று கவலை பட வேண்டாம். கர்ப்பிணி பெண்கள் தினசரி 300 மில்லிகிராம் வரை காஃபின் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, தினமும் ஒன்றரை கப் காபி எடுத்துக்கொள்ளலாம். இது குறித்து ஆய்வாளர் குஷ்பூ அகர்வால் கூறுகையில், " 200 மில்லிகிராமை விட குறைவாக காஃபின் எடுத்துக்கொண்டால் அது கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் நல்லது தான். அதே நேரம் காஃபின் என்பது காபியில் மட்டும் இல்லாமல், டீ, சாக்லேட்கள், சில குறிப்பிட்ட மருந்துகளிலும் கூட கணிசமான காஃபின் இருக்கும். அதை நாம் கணக்கில் கொள்ளத் தவற கூடாது" என்றார்.
Read more: சிக்கன் லிவர் Vs மட்டன் லிவர்.. இரண்டில் எது பெஸ்ட்..? யாரெல்லாம் லிவர் சாப்பிடக்கூடாது..?