முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

7 மாத கர்ப்பிணியை, 25 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த மாமியார்...

pregnant-woman-was-killed-by-her-mother-in-law
04:01 PM Nov 18, 2024 IST | Saranya
Advertisement

மாமியார் மருமகள் சண்டை என்பது காலம் காலமாக இருந்து வரும் பெரிய பிரச்சனை. பொதுவாக மாமியார் அமைதியான குணம் கொண்டவர் என்றால், மருமகள் ராட்சசியாகவும், மருமகள் அமைதியான குணம் கொண்டவர் என்றால் மாமியார் ராட்சசியாக இருப்பது உண்டு என்று பலர் கூறுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில் மாமியார், மருமகள் இடையே அடிக்கடி சண்டைகள் வருகிறது. இவ்வாறு தாய் மற்றும் மனைவி சண்டையிடுவதைக் கேட்டு கணவன் சோர்வடைகிறான். ஒரு கட்டத்தில் கணவன் எதையும் கண்டுக்கொள்ளாமல் போகும்போது பிரச்சனை வெடித்து விடுகிறது. அந்த வகையில் தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

பஞ்சாப் மாநிலம் தாஸ்காவில் 26 வயதான ஜெஹ்ரா என்ற இளம்பெண் அவரது மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் காதர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் கர்ப்பமாக இருக்கும் ஜெஹ்ராவிற்கும், அவரது மாமியாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, மாமியார் மருமகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரம் அடைந்த மாமியார் 7 மாத கர்ப்பிணியான தனது மருமகளை 25 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: குடையை மறந்துறாதீங்க..!! இன்று 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகுது..!!

Tags :
mother in lawmurderPregnant
Advertisement
Next Article