குளியலறையில் சடலமான 6 மாத கர்ப்பிணி.! மகனுக்கு தீவிர சிகிச்சை.! நடந்தது என்ன.?
கர்நாடக மாநிலம் பெங்களூரில் குளியல் அறையில் பொருத்தப்பட்டிருந்த ஹீட்டரில் வாயு கசிவு ஏற்பட்டு ஆறு மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள அஸ்வந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் காய்கறி வியாபாரியான இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும் 6 வயதில் மகனும் இருக்கிறார். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டு ஜெகதீஷ் வெளியே சென்று இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. காலிங் பெல் அடித்தும் பதில் இல்லாததால் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்திருக்கிறார் ஜெகதீஷ். அப்போது மகனும் மனைவியும் மயங்கிய நிலையில் கடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அங்கு அவரது கர்ப்பிணி மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று இறந்த ரம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கார்பன் மோனாக்சைடு வாயுவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ரம்யா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேஸ் மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டரால் விபத்து நடந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் பலியான நிகழ்வு அனைவரையும் சோகமடைய செய்திருக்கிறது.