கர்ப்பிணிகளே!. மார்பகத்தை பாதுகாக்க இந்த வழிமுறையை கடைபிடியுங்கள்!
breast care: கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை. கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. வசதியான உள்ளாடைகளை அணியுங்கள். கர்ப்ப காலத்தில் சரியான உள்ளாடை தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கும்.
கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் பேடெட் பிராவை தவிர்க்கவும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் பராமரிப்புக்கு சிறந்த ஐடியாவாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும்.
மார்பக காம்புகளின் மீது சோப் பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும். அதனால் வாசனையுள்ள சோப்புக்கு பதிலாக நல்லொதொரு மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இதோ.
மாய்ஸ்சுரைசிங் க்ரீம் மார்பக காம்புகள் வறட்சியாக இருந்தால் நல்லதொரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் சந்தையில் விற்கப்படுகிறது.
Readmore: எப்படியெல்லாம் சாதனை பண்றாங்க?. நாய்களுடன் நடைபயிற்சி செய்து கின்னஸ் உலக சாதனை!. எங்க தெரியுமா?