முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024இல் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..!! வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை..!!

The living Nostradamus warned that many of his predictions were yet to come true.
08:33 AM Sep 16, 2024 IST | Chella
Advertisement

தனது கணிப்புகளில் பல இன்னும் நிறைவேற இருப்பதாக வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

பிரேசில் நாட்டவரான 37 வயது Athos Salomé இதுவரை கணித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் துல்லியமாக நிறைவேறியுள்ளது. வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் இவர், கொரோனா பெருந்தொற்று, பிரித்தானிய ராணியாரின் மரணம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல் என கணித்தவை அனைத்தும் நிறைவேறியுள்ளது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் நிறைவேறவிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் அவர் கடந்த ஆண்டில் தமது கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், நான்கு சம்பவங்கள் நிறைவேறியுள்ளதாகவும், மேலும் பல நிறைவேற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதில், இன்னும் சில நாட்களில் ஒரு பெரிய சிறுகோள் பூமியை கடந்து செல்லும் என தற்போது NASA உறுதி செய்துள்ளதை, ஏற்கனவே வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஜூலை 28ஆம் தேதி இது தொடர்பில் தனது இன்ஸ்டாவில் காணொலி ஒன்றை பதிவு செய்துள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸ், செப்டம்பர் மாதம் NASA இந்த விவகாரத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அது நிறைவேறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மைக்ரோசாப்ட் செயலிழப்பு தொடர்பில் வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது மோதலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அல்லது சைபர் போருக்கான காரணமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி, உலகம் இதனால் 3 நாட்கள் ஸ்தம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் கணித்தது போலவே 3 நாட்கள் விமான சேவைகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரித்தானியாவில் மட்டும் 50,000 விமானங்கள், தரையிறங்கவும் வெளியேறவும் முடியாமல் ஸ்தம்பித்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருந்தார்.

மேலும், உலகளாவிய பேச்சுவார்த்தைகளால் மட்டுமே பேரழிவுகளை தவிர்க்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், 3ஆம் உலகப் போருக்கான வாய்ப்புகளையும் பேச்சுவார்த்தைகளால் தவிர்க்க முடியும் என்பதை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ நாடுகள் மீது ரஷ்யாவின் மிரட்டலும், மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலும் அடுத்தக்கட்டத்திற்கு நகரும் வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : புரட்டாசியில் எந்தெந்த விஷயங்களை செய்யக்கூடாது..? விரதம் இருந்து வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா..?

Tags :
சைபர் கிரைம்துல்லிய கணிப்புநாஸ்ட்ராடாமஸ்
Advertisement
Next Article