'குல்விந்தருக்கு பாராட்டு'!… பலாத்காரம் செய்தாலும் உங்களுக்கு ஓ.கேவா?… கங்கனா கண்டனம்!
Kangana: நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார். இதுதொடர்பாக இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில், "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நான் நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன் இரண்டாவது கேபினில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் என் முகத்தில் அறைந்தார்." என்று அவர்அந்த பதிவில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சிஐஎஸ் எஃப் அதிகாரிக்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். இதைப்பார்த்து அதிருப்தியான கங்கனா, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ கற்பழிப்பு, கொலை, திருட்டு ஆகியவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள், அதற்கான உணர்ச்சி, உடல், உளவியல் அல்லது பணம் சார்ந்த காரணங்களை கொண்டிருக்கின்றனர். இங்கு எந்த ஒரு குற்றமும் காரணமின்றி நடக்காது. இருப்பினும், அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
Readmore: நோட்…! இன்று காலை 9.30 மணிக்கு குரூப் 4 தேர்வு… தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை…