For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Praggnanandhaa | 'கருப்பு நிற காய்’..!! உஸ்பெகிஸ்தான் வீரரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் பிரக்ஞானந்தா..!!

07:56 AM Mar 06, 2024 IST | 1newsnationuser6
praggnanandhaa    கருப்பு நிற காய்’     உஸ்பெகிஸ்தான் வீரரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் பிரக்ஞானந்தா
Advertisement

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டார். கருப்பு நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார்.

Advertisement

பிரக்ஞானந்தாவுக்கு இது 3-வது வெற்றியாகும். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் டி. குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தனர். 6 சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரிச்சர்ட் ராப்போர்ட் (ஹங்கேரி), பர்ஹாம் மக்சூட்லூ (ஈரான்), பிரக்ஞானந்தா தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Read More : TVK Vijay | மகளிர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! விஜய் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு..!!

Advertisement