For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்..!! ரூ.2.67 லட்சம் ஒதுக்கிய அரசு..!! நீங்களும் விண்ணப்பிக்கலாம்..!!

2.67 lakh per person is allocated under this scheme by the central and state governments.
05:03 PM Oct 19, 2024 IST | Chella
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்     ரூ 2 67 லட்சம் ஒதுக்கிய அரசு     நீங்களும் விண்ணப்பிக்கலாம்
Advertisement

கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு மலிவு விலையில் வீட்டு வசதிகளை வழங்குவதற்கான மத்திய அரசின் ஒரு முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ் இந்தாண்டு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட தவணைத் தொகையை அரசு ஒதுக்கியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. "பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2029 வரை கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 2024 - 25ஆம் நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்ட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு சார்பில் இத்திட்டத்தில் ஒருவருக்கு 2.67 லட்சம் ஒதுக்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு 60%, மாநில அரசு 40% என்ற அடிப்படையில் 68,569 வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக ரூ.209.52 கோடி முதல் தவணையை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

* இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* ஏற்கனவே கான்கிரீட் வீடு இருக்கக் கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

* ஏற்கனவே வீடு வாங்குவதற்கு மானியம் பெற்றிருக்கக் கூடாது.

* பயனாளியின் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.

* 21 சதுர அடிக்கும் குறைவான வீடு இருப்பவர்கள், ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் இணையலாம்.

Read More : தவெக மாநாடு..!! அனுமதியின்றி வெட்டி சாய்க்கப்பட்ட ஒரு வயதான பனைங்கன்றுகள்..!! வெடித்த புதிய சர்ச்சை..!!

Tags :
Advertisement